எழுத கைகள் வர மறுக்கிறது.
வாழ நினைத்த அனைத்தையும் எழுத்துகளில் அடைத்து விட முடியுமா?
அள்ளி பருக முடிய நீரோடையா அது,
காற்றாட்டு வெள்ளம் அல்லவா?
கட்டியணைத்து, உரோமச் சூட்டில் குளிர் காய வேண்டும்.
அந்த காதோரக் கூந்தல் காட்டில் முகம் புதைய வேண்டும்.
அவள் வேர்வை மணத்தில் குளிக்க வேண்டும்.
அழகான ஆரஞ்சு பட்டாம்பூச்சியை பிடித்து,
ஓடோடி வந்து காட்டும் தோழமை வேண்டும்.
ஒரே சோபாவில், மடியில் அமர்ந்து சினிமா ரசிக்க வேண்டும்.
மார்கழி குளிர் காற்றில், மாடியில் பௌர்ணமி வெள்ளிச்சத்தில் நனைய வேண்டும். ஒரே கோப்பை மது பகிர்ந்து மடி மயங்க வேண்டும். கைகோர்த்து கடைக்கோடி சுற்ற வேண்டும்.
உன் உருவில் கொஞ்சி விளையாட செல்ல மகள் வேண்டும். சுற்றம் அனைத்தும் பொறாமை கொள்ளும் அன்யோன்யம் வேண்டும்.
ஒரு நாளும் பிரிந்து உறங்காத அன்பு வேண்டும்.
செல்ல சண்டைகள், முத்தக் கூடல்கள் வேண்டும்.
அவளுக்கென அனைத்தும் ஆகி, அவள் காலடியில் வாழ்ந்து,
இம்மை மறுமை அனைத்திலும்
அவளுக்காக அவனுடையவனாக,
அவளுடன் ஒன்றாக மறணிக்க வேண்டும்.
Leave a comment