காம மோகத்தில் பிரம்மன் உதிர்த்த விதை,
ஓரக்கண் பார்வையில் பரமனையும் பித்தாக்கும் கண்கள்,
நிழல் தொடா இராமனும் ஸ்பரிசிக்க ஏங்கும் ஸ்பரிசம்,
பொறாமையில் விதியும் பொங்கும் —
எவனால் இவள் பிறந்தாள்?
பேசி சிரித்து மகிழ்ந்திட,
மஞ்சத்தில் துகிலுரித்து,
மோகத்தில் மனம் மயக்கி,
காமத்தில் உச்சம் தொட —
கொடுத்து வைத்தவன் எவனோ
என வெம்பிய நாட்கள் பல…
ஆனால் இன்று
என் மஞ்சத்தில்
என்றைக்கும் என்னவளாய் — அவள்.
கொடுத்து வைத்தவன் — நானே!!!
Leave a comment